10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, செப்.27 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்ட 5 ஆவது மாநாடு சனிக்கிழமை புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட இணைச் செயலாளர் முருகேசன் வாசித் தார். மாவட்ட துணைத் தலைவர் சின்னச்சாமி வரவேற்றார். மாநிலச் செய லாளர் எம்.வி. செந்தமிழ் செல்வன் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் மதிவாணன் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை மாவட்டப் பொருளாளர் துளசிராமன் சமர்ப்பித்தார். 8 ஆவது ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடி யாக நியமனம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகை களை வழங்க வேண்டும். தமிழக அரசு பழைய ஓய்வூதியச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைய வேண்டும். ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண் டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தின் புதிய தலைவராக எம்.சிராஜுதீன், மாவட்டச் செய லாளராக எஸ். மதிவாணன், மாவட்ட பொருளாளராக எல்.துளசிராமன், துணை தலைவர்களாக எஸ்.குருநா தன், கே. சின்னச்சாமி, என்.விஜய குமார், டி.ரவீந்திரநாத், இணைச் செய லாளர்களாக எஸ்.முருகேசன், எம். சேகர், ஆர்.சுந்தரராஜன், ஆர்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைத் தலைவர் சங்கரி நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.
