முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு தின அமைதி பேரணி
மயிலாடுதுறை, ஆக 7- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், இலுப்பூர், செம்பனார்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி திமுக சார்பில் நடைபெற்றது. திருக்கடையூரில் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில், தில்லையாடி வள்ளியம்மை நினைவு நுழைவு வளைவு அருகிலிருந்து, திமுகவினர் அமைதி பேரணியாக புறப்பட்டு திருக்கடையூர் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் அமுர்த. விஜயக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். செம்பனார்கோவில் கீழமுக்கூட்டிலிருந்து வடக்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக மாவட்டச் செயலாளர் நிவேதா எம்.முருகன் தலைமையில் அமைதி ஊர்வலமாக ஏராளமானோர் பேரணியாக வந்து, மேலமுக்கூட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட துணைச் செயலாளர் மு.ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், அமுர்த.விஜயக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.