காலமானார்
தஞ்சாவூர், ஆக. 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.கே.பாலகிருஷ்ணன்(80) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை இரவு காலமானார். பொதுப்பணித்து றையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், பணிக்காலத்தில் அரசு ஊழியர் சங்கத்திலும், பின்னர், ஓய்வூதியர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றியவர். இவருக்கு நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற மனைவி தமிழரசி மற்றும் ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். நீண்ட காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி மறைந்த அவருடைய உடலுக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகி ஆர்.ராஜகோபாலன், நிர்வாகிகள் கே.கிருஷ்ணமூர்த்தி, சிவ.ரவி, ரெ.ஞானசூரியன், கண.கல்யாணம், சிஐடியு என்.கந்தசாமி, தமுஎகச மாவட்டத் தலைவர் முருக.சரவணன் மற்றும் ஒன்றியக் குழு தோழர்கள், அரங்க தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.