பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஆக.20 - தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்ப னைக் கூட கண்காணிப்பா ளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின் னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கும்ப கோணம் மற்றும் இதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 346 விவசாயிகள் 72.940 மெ.டன் பருத்தியை எடுத்து வந்தனர். கும்ப கோணம், செம்பனார்கோ வில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணி கர்கள் பருத்தி மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு அதிகபட்சம் ரூ.7,749, குறைந்தபட்சம் ரூ.7,268, சராசரி ரூ.7,521 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் தோராய மதிப்பு ரூ. 54.70 லட்சம்.
மின் மோட்டார்களின் காப்பர் கேபிள் திருட்டு
பாபநாசம், ஆக.20 - ஆற்றுப் பாசனம், வாய்க்கால் பாசனம் அற்று போன நிலையில், வாழ்வாதாரத்திற்காக விவ சாயிகள் மின் மோட்டா ருக்கு மாறினர். உர விலை உயர்வு, கூலி ஆட்கள் தட்டுப்பாடு, இயற்கை பேரிடர் என பல தடைகளை கடந்தால், வயலுக்கு நீர் பாய்ச்ச விவ சாயிகள் பல ஆண்டு களுக்கு முன்னர் பதிவு செய்து, காத்திருந்து முன் னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற்று, மோட்டார் ரூம்களில் வைத்துள்ள மின் மோட்டா ருக்கும் தற்போது ஆபத்து வந்துவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், மணலூர் பகுதிகளில் விவ சாய நிலங்களில் உள்ள 10-க்கும் அதிகமான மின் மோட்டார்களில் இருந்த கேபிள் திருட்டு போனது. அதிலுள்ள காப்பர் பல ஆயிரத்துக்கு விலை போகும் என்பதால், மோட் டார் திருடர்கள் திங்களன்று இரவு ஒரே நேரத்தில் பத்து மோட்டார்களில் இருந்து கேபிள்களை திருடிச் சென்றனர். மீண்டும் மின் மோட் டார்களை சரி செய்து, இயக்க விவசாயிகளுக்கு பல ஆயிரம் தேவைப்ப டும். இனி பகல் பொழுது மட்டுமல்ல, இரவு பொழு தையும் வயலில்தான் கழிக்க வேண்டுமா என விவசாயிகள் புலம்புகின்ற னர்.
முகாமிற்கு வராத வட்ட வழங்கல் அலுவலர்கள்: பொதுமக்கள் ஏமாற்றம்
கும்பகோணம், ஆக.20 - தமிழக அரசு உங்களுடன் ஸ்டா லின் எனும் திட்டத்தில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பொன்னி யம்மன் கோவில் வளாகத்தில், நாச்சி யார்கோவில், மாத்தூர், திருப்பந்துறை ஆகிய ஊராட்சிகளுக்கான முகாம் புத னன்று நடைபெற்றது. முகாமை கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.அன்பழகன் துவக்கி வைத்தார். முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். முகாமில் திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய செய லாளர் சரவணன், நாச்சியார்கோவில் ஊராட்சி செயலாளர் பூபதி, மாவட்ட பிரதிநிதி உமாசங்கர், கும்பகோணம் வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், நாச்சி யார்கோவில் ஊராட்சி செயலர் வரத ராஜன் ஆகியோர் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர். முகாமில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு பரிசீல னைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குடும்ப அட்டை சம்பந்தமாக பெயர் சேர்த்தல், நீக்கல், குடும்பத் தலைவர் பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதலுக்கான விண்ணப்பங்களை பயனாளிகள் கொண்டு வந்தனர். ஆனால் முகாமில் வட்ட வழங்க அலுவ லர்கள் யாரும் வராததால், பயனாளி கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற னர்.
எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஆக.20 - தஞ்சாவூர் எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளா கத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத் தினர் (லிகாய்) புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் ஜி. புகழேந்தி தலைமை வகித்தார். துணைத் தலை வர் ஏ.ரமேஷ் தொடங்கி வைத் தார். செயலர் பி. வேளாங் கண்ணி வாழ்த்துரையாற்றி னார். தஞ்சாவூர் கோட்ட தலைமை நிலையப் பொறுப் பாளர் பி. தங்கமணி சிறப்பு ரையாற்றினார். அனைத்து முகவர்களுக் கும் மெடிக்ளைம் வசதியை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட முகவர்களுக்கும் குழு காப்பீட்டுப் பலன் களை வழங்க வேண்டும். பாலிசிகள் மீதான சேவை (ஜி.எஸ்.டி.) வரியை நீக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சேவையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தினர்.