tamilnadu

பட்டா வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் தாம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தல்

பட்டா வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் தாம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 13 - பட்டா வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் வலி யுறுத்தி உள்ளார். தாம்பரம் மாநக ராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், திருமங்கை யாழ்வார் நகர், தாங்கல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி புதனன்று (ஆக.13) தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தாம்பரம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள 102 குடும்பங்கள், திருநீர்மலை 31வது வார்டு திருமங்கை யாழ்வார் புரம், சர்வே எண் 234/2, 272 ஆகியவற்றில் உள்ள குடி யிருப்புகள், பொழிச்ச லூர் ஞானமணி நகர் சர்வே எண் 288/2ல் மறு குடியமர்வு செய்யப்பட்ட 98 குடும்பங்கள், திரிசூலம் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி இந்த மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டடத்தின் போது கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒருபுறம் அரசு பட்டா கொடுத்து வரு கிறது. மறுபுறம், தமிழ கம் முழுவதும் பட்டா கேட்ட மீண்டும் மீண்டும் மக்கள் மனு கொடுத்து வருகின்ற னர். அதிகாரிகளின் அலட்சி யம், வருவாய்த்துறை ஆவ ணங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் செய்யாததே இதற்கு காரணம். வரு வாய்த்துறை நிலநிர்வாக ஆணையரும், ஆட்சியரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். பட்டா வழங்கு வதில் உள்ள பிரச்ச னையை ஆராய்ந்து வரு வாய்த்துறை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். தாம்பரம் அண்மை யில்தான் மாநகராட்சியாக மாறியது. ஆனால், பட்டா கோருகிற மக்கள் 50, 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஏற்கெனவே உள்ள இடத்திற்கு பட்டா தர முடியாது. பழைய அர சாணைகளை காட்டி, ஒரு செண்ட் பட்டா மட்டுமே வழங்கப்படும் என்று அதி காரிகள் கூறுகின்றனர். இதனால் வாழ்கிற இடம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே, மக்கள் குடி யேறிய காலத்தை வைத்து பட்டா வழங்கும் அளவை தீர்மானிக்க வேண்டும். மாறாக, தற்போதைய சூழ லுக்கு ஏற்ப தீர்மானிப்பதை சிபிஎம் ஏற்கவில்லை. இதை வருவாய்த்துறை பரிசீலிக்க வேண்டும். ராஜீவ் காந்தி நகர் வன நிலம் என்று ஆவணத்தில் உள்ளது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசிக்கின்றனர். அந்த இடத்திற்கு மாற்று இடம் தரப்பட்டுவிட்டது. ஆட்சியரும் பட்டா வழங்க உத்தரவிட்டுவிட்டார். அதன்பிறகும் பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். புறவழிச்சாலை அமைப்பதற்காக அங்கி ருந்து அகற்றப்பட்டவர் களை 1998ம் ஆண்டு பொழிச்சலூரில் மாவட்ட ஆட்சியரால் குடிய மர்த்தப்பட்டனர். இவர்க ளுக்கும் பட்டா மறுக்கப் பட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் அதிகாரி களின் அலட்சியமே கார ணம். வருவாய்த்துறை அதி காரிகளை முதலமைச்சர் வேலை வாங்க வேண்டும். திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளில் கோவில் நிலங்க ளில் குடியிருப்போரை அறநிலையத் துறை வதைக்கிறது. மக்களுடன் பேசி நியாயமான வாட கையை நிர்ணயிக்க வேண்டும். மக்களின் பக்கம் நின்று பிரச்சனையை அணுக வேண்டும். பட்டா கோரிய மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணா விடில் அரசுக்கு அவப் பெயர் ஏற்படும். இவ்வாறு அவர் கூறி னார். இதன்பின்னர் தலை வர்கள் வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்லாவரம் பகுதிச் செய லாளர் எம்.தாமோதரன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், ஜி.செந்தில்குமார், தாம்பரம் பகுதிச் செய லாளர் தா.கிருஷ்ணா, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.சி.பிரபாகரன், ஆர்.விஜயா மற்றும் ஜி.விஜயலட்சுமி எம்.சி., தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், தொழிற்சங்கத் தலை வர் கு.ராஜன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.