tamilnadu

img

ஆக்கூரில் புதிய கிறிஸ்துநாதர் ஆலயம் திறப்பு விழா

ஆக்கூரில் புதிய கிறிஸ்துநாதர் ஆலயம் திறப்பு விழா

மயிலாடுதுறை, அக்.6-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், ஆக்கூர் மடப்புரத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய கிறிஸ்துநாதர் ஆலயம் திறப்பு விழா  நடைபெற்றது. பேராயர் எ.கிறிஸ்டியான் சாம்ராஜ் தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். நிவேதா முருகன், திருச்சபையின் செயலாளர் ஆர்.தங்கபழம், பேராயரம்மா எஸ்தர் வினோதா சாம்ராஜ், திருச்சபையின் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் ஸ்டான்லி தேவகுமார், ஞானப்பிரகாசம், குணாளன் பாக்யராஜ், தாமஸ் கென்னடி, ஜான்சன் நேசப்பா, ஆண்ட்ரூஸ் ரூபன், அடைக்கலசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் எ. கிறிஸ்டியான் சாம்ராஜ் தலைமையில் ஏராளமான மக்கள், மதங்களைக் கடந்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி, ஆக்கூர் கடைவீதியிலிருந்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கிறிஸ்துநாதர் ஆலயத்தை பேராயர் திறந்து வைத்தார்.  விழாவில் ஆக்கூர் குருசேகரத்தின் ஒருங்கிணைப்பாளர் சபைகுரு எ.சார்லஸ் எட்வின் தாஸ், சபைகுரு சாமுவேல் ராஜ் நிக்கல்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.