கேரளத்தில் ஓணம் தொடங்கியது தெருவெங்கும் பூக்கோலம்
திருவனந்தபுரம், ஆக.26- கேரளத்தில் பூக்களின் வாசனையுடன் ஓணம் வந்துவிட்டது. செவ்வாயன்று அத்தம் தொடங்கி செப்டம்பர் 5 திருவோணத்துடன் கொண்டாட்டங்கள் நிறைவடையும். அத்தம் பிறந்தவுடன் (தொடக்கம்), கேரளம் முழுவதும் பூச் சந்தையும் சுறுசுறுப்படைந்து உள்ளது. கிராமம், நகரம் வேறுபாடின்றி ஓணம் கொண்டாட்டங்களால் பரபரப்பாகி விட்டன. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் ஓணம் கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மலர் அலங்காரங்களுக்காக வெளி மாநிலங்களிலிருந்து பூக்கள் வரத் தொடங்கி யுள்ளன. உள்ளூரில் பூ சாகுபடி அதி கரித்துள்ளதால், இந்த முறை விலைகள் அதிகரிக்கவில்லை. பூக்களில், வாடாமல்லி யின் விலை உயர்ந்து காணப்படுகிறது. வாடா மல்லி கிலோவுக்கு ரூ. 300 விற்கப்படுகிறது. மேலும் மஞ்சள் சாமந்தி - ரூ. 120, ஆரஞ்சு சாமந்தி - ரூ. 80, அரளி - ரூ. 400, பிச்சி - ரூ. 200, கதம்பம் - ரூ. 250, வெள்ளை சாமந்தி - ரூ. 300, சில்லு ரோஸ் - ரூ. 250, சிவப்பு சாமந்தி - ரூ. 450 என பூக்கள் விற்பனையாகி வருகிறது. இந்த விலை திருவோணம் நெருங்கும்போது மாறக்கூடும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.