உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கோவை அரசு கல்லூரியில் சனியன்று ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்’ என்ற கருப்பொருளில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கல்லூரி முதல்வர் ஷீலா, சுற்றுலா மற்றும் பயண வேளாண்மை துறை தலைவர் கோ.ப.சங்கீதா, உதவி பேராசிரியர் ஜே.ஜெயமணி, மாவட்ட சுற்றுலா அலுவலர் டி.ஜெகதீஸ்வரி கலந்து கொண்டனர்.
