எம்முயிர் தேசத்துக் காவலனே!
அவசர காலத்தின் ஆணவத் தாண்டவங்களுக்கு அடங்காத மாணவர் பருவம் மார்க்சியத்தை வடிவமைக்க மானுடம் காக்க போராடிய மகத்தான செம்படைக்கு தலைமையேற்ற புரட்சித் தளபதி ராமன் பெயர் சொல்லி பாசிச வெறி கொண்டு நர வேட்டையாடியும் கோரமுகம் மறைக்க தேசபக்தி என்னும் பகடி காட்டும் மனு அதர்மவாதிகளை மானுட அரங்கில் தோலுரித்துக் காட்டிய ‘சீத்தாராம்’! காஷ்மீர் முதல் குமரி வரை தோழர்கள் கூடுமிடமெல்லாம் கலங்காது களம் கண்டாய் நின் பேரறிவால் ஈர்த்தாய்! தேசம் துயருற்ற போது துணிவின் நாயகனாய் துவழாது தோழர்களுக்கு தெம்பூட்டினாய் வீட்டுக்காவல் அராஜகங்களை வீதி தோறும் முழங்கினாய் கோழைகளின் மிரட்டலுக்கு இன்குலாப் முழக்கமே ஆயுதமானது எழுச்சி பெற்ற பயணத்தில் எதிர்பாராத இழப்பல்லவோ எங்கள் தோழனே நீ நினைத்ததை நிறைவேற்ற உன் செஞ்சுவடு பற்றி செம்பதாகை ஏந்தி வருகிறோம்! பாட்டால் பாரதத்தை நிமிரச் செய்த பாரதி பிறந்த மறுநாள் செப்டம்பர் 12 பாட்டாளி வர்க்க படைத்தளபதி பாரதத்தின் விதையானாய் பாரெங்கும் பரவட்டும் உன் புரட்சி வேட்கை தோழா உமக்கு செவ்வணக்கம்!