tamilnadu

img

கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில் நுட்பம் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கம்

கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில் நுட்பம்  தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கம்

சென்னை,  செப். 13 - கடலில் இருந்து  தரவுகளை சேக ரிக்க புதிய தொழில் நுட்பத்தை சென்னை யில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம் உரு வாக்கியுள்ளது. கடலின் தரைப்ப குதியில் இருந்து 350  கிலோ மீட்டர் வரை யில் மீன்பிடி படகில் சென்று தரவுகளை சேகரிக்கவும், கடலின் சுகாதாரத்தை ஆய்வு செய்யவும் பயன்படும் வகையில் போட் பேஸ்ட் ரியல் டைம் டவேட் கடல்  கண்காணிப்பு கருவியை உருவாக்கி யுள்ளது. இதற்கு முன்னர் இந்தியப் பெருங் கடல் பகுதிகளில் தரவுகளை அளவிடுவ தற்கு பெரிய ஆராய்ச்சிக் கப்பல்கள், நிலை யான அல்லது நங்கூரமிடப்பட்ட பாய்மர  அமைப்புகள் தேவைப்பட்டன. ஆனால், தற்போது குறைந்த செயல்பாட்டு செலவுகள் மற்றும் அதிக நெகிழ்வுத் தன்மையுடன் கடற்கரையின் தரைப்பகுதி மற்றும் ஆறு களின் நீர் கடலில் கலக்கும் கழிமுக பகுதி யில் ஏற்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட  தரவுகளை சேகரிக்கும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளது. இந்த அமைப்பு வங்காள விரிகுடாவில் உள்ள எண்ணூர் கடற்கரையில் வெற்றி கரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் முதல் 100 மீட்டர் ஆழத்தில் இருந்து தட்ப வெப்பம், கடலில் உள்ள பிற கனிமங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை இது பெற்றுத் தருகிறது.