கொடிக்கம்பம் அகற்றும் விவகாரம் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் புதிய மனு!
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 18-ஆம் தேதிக்குள் பொது இடங்களில் இருக்கும் கொடிக் கம்பங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு வரு வாய்த்துறை செயலாளர் பெ. அமுதா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து, அவசர வழக்காக விசாரிக்குமாறு முறையீடு செய்துள்ளது. இம்மனுவை புதனன்று விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவக் கல்விக் கட்டணம் உயர்வு
சென்னை: தமிழ்நாட்டில் 2025-26 ஆம் கல்வி யாண்டுக்கான மருத்துவப் படிப்பு கல்விக் கட்டணம் உயர்ந்து உள்ளது. மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்ச மாக உயர்ந்துள்ளது. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.34 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதில் மாற்ற மில்லை. வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் ரூ.24.5 லட்ச மாக இருந்த மருத்துவ கல்விக் கட்டணம் ரூ.27 லட்சமாக உயர்ந்துள்ளது. என்.ஆர்.ஐ. கைவிடப்பட்ட ஒதுக்கீடு நீக்கப் பட்டுள்ளதால், இந்த வகையில் காலியாகும் இடங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டிற்கு மாற்றப்படும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ரூ.5.40 லட்சம், நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் ரூ.16.20 லட்சம், வெளிநாடு வாழ் மாணவர் களுக்கு ஒதுக்கீட்டு கட்டணம் ரூ.29.4 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி யின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அவர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த மனுவின் போது, அசோக்குமார் தரப்பில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனை களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. நீதிபதிகள் பயணத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்புக்கு உத்தரவிட்டும், அம லாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஒரு மாதத்தில் 5 ஆயிரம் வழக்குகள்
சென்னை: தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை பின்பற்றி வருவதாக தெரிவித்திருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால், “2022 முதல் 2025 மே வரை 10,665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14,934 பேர் கைது செய்யப்பட்டனர். 2023 ஆம் ஆண்டில் 10,256 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 14,470 பேர் கைது செய்யப்பட்டனர். 2024 ஆம் ஆண்டில் 11,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,903 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு மே மாதம் வரை 5,488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8,480 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு
சென்னை: 645 காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. சார்பதி வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 28 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது.
‘உயிருக்கு ஆபத்து’
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகம் அருகே சிலர் ஆயுதங்களுடன் நோட்டமிட்டதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தி.நகர் காவல் துணை ஆணையர் அலுவல கத்தில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் காவல்துறை நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
சென்னை, ஜூலை 15 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.சீனிவாசன், விருதுநகர் மாவட்ட காவல்துறை யின் அராஜகப் போக்கை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜூலை 12 அன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட மையக் கட்டிடத்தில் சங்கத்தின் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதை ஆட்சேபித்து சங்க உறுப்பினர் அல்லாத சிலர் காவல்துறை யில் புகார் அளித்தனர். அமைதிப் பேச்சுவார்த்தையில் காவல் துறை ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாகவும், சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அராஜகமாக செயல் பட்டதாகவும் மு.சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். மாநில நிர்வாகிகள், மகளிர், மாற்றுத்திறனாளிகள் மீது காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட தாகவும், பல ஊழியர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் இதைக் கண்டித்து ஜூலை 14 அன்று தமிழ்நாடு முழு வதும் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடுநிலையான விசா ரணை, சங்கக் கட்டிடத்தை மாநில மையத்திடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசின் உடனடித் தலையீடு வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நியாயம் கிடைக்கும் வரை தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மு.சீனி வாசன் குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண், இணைய தளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோவை நீக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் அவ ரது அந்தரங்க வீடியோவை பார்த்து விசாரித்த காவல் துறை அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக் கிறது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) இருந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை உடனடியாக நீக்கவும் காவல்துறைக்கு நீதிபதி கள் உத்தரவிட்டனர்.
பாஸ்போர்ட் கோரி சீமான் மனு
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமானின் பாஸ்போர்ட் மாயமாகி விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட கோரி மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வழக்கின் விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கமல்ஹாசன் ஜூலை 25-இல் பதவியேற்கிறார்
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங் களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தலை மையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஜூலை 25 ஆம் தேதி நாடாளுமன்றத் தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி யேற்கவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.