tamilnadu

img

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் திறப்பு

மதுரை மாநகராட்சி பள்ளிகளில்  புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் திறப்பு

மதுரை, அக்.22- மதுரை மாநகராட்சி கட்டுப் பாட்டில் உள்ள பள்ளிகளில் மாண வர்களின் கல்வி  மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் புதனன்று திறந்து வைக்கப்பட்டன. அனுப்பானடி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, திரௌபதியம்மன் எண்.2 ஆரம்பப் பள்ளி, மானகிரி ஆரம்பப் பள்ளி மற்றும் செனாய்நகர் நடுநிலைப்பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் துணைமேயர் தி. நாகராஜன் இணைந்து புதன்  கிழமை திறந்து வைத்தனர். மொத்தம் 5 கூடுதல் வகுப்ப றைகள் மற்றும் 16  கழிப்பறைகள் ரூ.121 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இவை மாணவர் களுக்கு மேம்பட்ட கல்விச் சூழலும், சுகாதார வசதிகளும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணை  ஆணையாளர் ஜெய்னு லாப்தீன், உதவி ஆணையாளர் மணி மாறன், கல்வி அலுவலர் ஜெய் சங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பி னர்கள் பிரேமா, வசந்தாதேவி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.