ரூ.45.98 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் திறந்து வைப்பு
பொள்ளாச்சி, செப்.13- பொள்ளாச்சியில் ரூ.45.98 கோடி மதிப்பீட்டில் அனை வருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 512 வீடுகளை உதய நிதி ஸ்டாலின் திறந்து வைந்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிட்ட சூராம்பாளையம் பகுதி பணிக்கம்பட்டியில், தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவ ருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.45.98 கோடி மதிப்பீட்டில் 512 வீடுகள் கொண்ட புதிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை யில் இருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளியன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி புதிய குடியிருப்பு வளாகத்தில் பயனாளிகளுக்கு வீட்டின் சாவி மற்றும் ஆவ ணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி வழங்கி னார். இதில், நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், திமுக நகர செயலாளர்கள் நவநீதி கிருஷ்ணன், அமுதபாரதி, நகராட்சி ஆணையர் ந. குமரன், கோட்டாட் சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் பயனா ளிகள், ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.