குறைதீர் கூட்டங்களை நீர்த்துப் போக செய்யும் புதிய திருத்த அரசாணை
தமிழக முதல்வர் தலையிட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
மதுரை, அக்.5- குறைதீர் காலாண்டு கூட்டங்களை நீர்த்துப் போக செய்யும் புதிய திருத்த அரசாணையை உடனடியாக தமிழக முதல்வர் வாபஸ் பெற வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஆ. பாலமுரு கன், மாவட்டத் தலைவர் பாரதி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: தமிழக அரசில் வருவாய் நிர்வாக ஆணையரகம் மிக முக்கிய அதிகாரம் கொண்டதாகும் துறையாகும். மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமல்ல, மாநில தலைமை உயர் அதிகாரிகளையும் ஒருங்கிணைக்கும் தகுதி வருவாய் நிர்வாக ஆணையருக்கு உண்டு. பெரும்பாலும் கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது முதன்மை செய லாளர் அந்தஸ்தில் உள்ள உயர் அதி காரிகள் மாநில வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளனர். ஒன்றரை வருடங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை 2018 ஆம் ஆண்டு வருவாய்த்துறை அரசாணை 300ன்படி மாற்றுத் திற னாளிகளுக்கான காலாண்டு குறைதீர் கூட்டம் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் கூட்டப்பட்டு வந்தது. கடந்த ஒன்றரை வருடங்க ளுக்கு மேலாக இக்கூட்டம் நடத்தப்பட வில்லை. மாற்றுத் திறனாளிகள் சங்கம் இதை சுட்டிக்காட்டி வலியுறுத்தி வந்தது. நீர்த்துப்போகச் செய்யும் அரசாணை தற்போது புதிய திருத்த அரசாணை மூலம் வருவாய் நிர்வாக ஆணையர் கூட்டம் நடத்தும் பொறுப்பை தமிழக அரசு கை கழுவி உள்ளது. அனைத்து துறைகளிலும் சம்பந்தப்பட்ட மாற் றுத்திறனாளிகளின் சட்ட உரிமைகள், அரசு திட்டங்கள் மாற்றுத்திறனாளி களுக்கு சென்றடைவதை கண்கா ணிக்க, குறைகளை தீர்க்க நடத்தப்பட்டு வந்த கூட்டங்களை நீர்த்துப் போக செய்யப் போகிறது இந்த அரசாணை. மாற்றுத்திறனாளிகள் ஆணையர் தான் மாநில அளவிலான காலாண்டு கூட்டங்களை இனி நடத்துவார் என்ற இந்த திருத்த அரசாணை கடுகளவில் கூட பயன் தராது. முதலமைச்சர் பொறுப்பில் மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளது என்பதெல்லாம் இனி வெற்று பேச்சுகளாக மட்டுமே இருக் கும். எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த திருத்த அரசாணையை வாபஸ் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் தானடித்த மூப்பாக செயல்படுவதை தடுக்க, மாற்றுத்திறனாளிகளின் உரி மைகளை காக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.