5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய விருது
சென்னை, ஆக. 27 - தமிழ்நாட்டில் 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசின் தேசிய தர நிர்ணய விருது வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் நடந்த நிகழ்வில், தேசிய தர நிர்ணய வாரிய சான்றிதழ் பெற்றுள்ள ஓமந்தூரார் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், அமைச்சர் மா. சுப்பிரமணி யனிடம் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கள் உள்ளன. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. முதல் முறையாக தற்போது தமிழகத்தின் 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்றார். மருத்துவ பயனாளியை அணுகுதல் மற்றும் தொடர் சிகிச்சை, மருத்துவ பயனாளிகளின் பராமரிப்பு, மருந்து மேலாண்மை, தொற்று கட்டுப் பாடு, பாதுகாப்பு மற்றும் தர மேம்பாடு உள்ளிட்ட 10 அளவீடுகளின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன என்று அவர் விளக்கினார். மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப் பேற்ற பிறகு மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மேற்கொண்ட நடவடிக்கை களால் கடந்த 4.5 ஆண்டுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஏறக்குறைய 1600 விருதுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.