கோவை மற்றும் நீலகிரியில் தேசிய மக்கள் நீதிமன்றம்
கோவை, செப்.13- கோவை மற்றும் நீலகிரியில் நடை பெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,266 வழக்குகளுக்குத் தீர்வு எட்டப் பட்டுள்ளது. கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி ஜெகதீஷ் சந்திரா தொடங்கி வைத் தார். முதல் நிகழ்வாக, சாலை விபத்தில் உயிரிழந்த முத்தையா என்பவரின் மனைவி தேவகிக்கு 48.64 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நீதிபதி வழங்கினார். எதிர்பாராத இந்த உதவி யால் கண்கலங்கிய தேவகி, நீதிபதிக ளுக்கு தனது நன்றியைத் தெரிவித் தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு வழக்குகள் சமரசத்தின் மூலம் தீர்க் கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற் றிய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) ஆரம்பத் தில் பலரின் எதிர்ப்பைச் சந்தித்தாலும், இப்போது அதன் நன்மைகளை அனை வரும் உணர்ந்துள்ளதாகவும், இந்த நீதிமன்றத்தின் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்க முடிவதுடன், செலுத் தப்பட்ட நீதிமன்ற கட்டணமும் திரும்பப் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 2,563 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு மக்களின் ஒத்துழைப்பும், வழக்கறிஞர்களின் பங்களிப்பும் மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இன்சூரன்ஸ் நிறுவனங் கள், போக்குவரத்துத் துறை, நிலம் தொடர்பான துறைகள் போன்ற அரசுத் துறைகள் வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என் றும் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் பற் றாக்குறை நிலவுவதால், அரசு அதிகாரி கள் வழங்கும் ஒத்துழைப்பு வழக்கு களை விரைந்து முடிக்க உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார். நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான முரளிதரன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம், தொழிலாளர் நீதி மன்ற நீதிபதி சந்திரசேகரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சசிகலா உள்ளிட்ட பல நீதிபதிகள் கலந்து கொண்டனர். ஊட்டியில் மட்டுமல்லா மல், குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் போன்ற பகுதிகளிலும் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வழக்குகள் உட்பட மொத்தம் 1,391 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் டன. இவற்றில் 703 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குக ளின் மொத்த தீர்வுத் தொகை ரூ. 5,45,66,496 என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மற்றும் நீலகிரியில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதி மன்றம், மொத்தம் 3,266 வழக்குக ளுக்குத் தீர்வு கண்டு, விரைவான மற்றும் சமரசமான நீதி வழங்குவதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.