tamilnadu

img

டைம்லெஸ் தமிழ்நாடு” ஆவணப்படத்திற்கு தேசிய விருது

டைம்லெஸ் தமிழ்நாடு” ஆவணப்படத்திற்கு தேசிய விருது

சென்னை, ஆக. 19- தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காக தயாரிக்கப்பட்ட ‘டைம்லெஸ் தமிழ்நாடு’ (Timeless TamilNadu) என்ற ஆவணப் படத்திற்கு 71 ஆவது தேசிய திரைப்பட  விருது பட்டியலில் சிறந்த கலை  மற்றும் பண்பாடுக்கான படத்திற்கான  “ராஜத்கமல்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக செவ்வாயன்று தலைமைச்  செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை, செலிபிரிட்டி மேலாண்மை நிறு வனத்தைச் சேர்ந்த முதன்மை செயல் அலுவலர் பிரசாந்த் சோட்டாணி, நிறுவ னர் மற்றும் இயக்குநர் நிஷா சோட்டாணி,  இயக்குநர் காமக்யா நாராயன் சிங் ஆகி யோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை  கவரும் வகையிலும், தமிழ்நாட்டில்  உள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப் படுத்தவும், தமிழ்நாட்டை சர்வதேச அள வில் விரும்பத்தக்க சுற்றுலா மாநிலமாக மேம்படுத்துவதற்காகவும் 2022-ஆம் ஆண்டு சுற்றுலாத் துறையின் நிதி உதவி யுடன் இந்த ஆவணப்படம் செலிபிரிட்டி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் காமக்யா நாரா யண சிங் தலைமையில் தயாரிக்கப்பட்டது. இப்படமானது சென்னை மற்றும் மாமல்லபுரம், தஞ்சாவூர் மற்றும் நீலகிரி,  திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும்  மதுரை, காரைக்குடி மற்றும் ராமேஸ்வரம்  போன்ற இடங்களில் ஒவ்வொரு இடத் திற்கும் 30 நிமிட காணொளியாக தயா ரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத் துடன் “தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023” செப்டம்பர் 26 அன்று முதல மைச்சரால் வெளியிடப்பட்டது.  பல்வகையான சுற்றுலா தலங்கள்,  பிரம்மாண்ட கோவில்கள், அழகிய மலை  சுற்றுலாத் தலங்கள், வனவிலங்கு சரணா லயங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பல்வகைப்பட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. பல்வேறு குறும்படங்கள் சுற்று லாத்துறை மூலம் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா  சந்தைகள் மற்றும் விளம்பர முகாம்களில்  விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.