ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு'
நாகப்பட்டினம், அக். 14- தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு, நாகப்பட்டினம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில், செவ்வாய்க்கிழமை மாவட்டத் தலைவர் பாப்பு. ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கனக.ரெத்தினம் வரவேற்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் வி. பாலசுப்பிரமணியன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் என். கண்ணையன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். விவாதங்களுக்குப் பின்னர், 2 அறிக்கைகளும் ஏற்கப்பட்டன. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பி. குணசேகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி. அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச்செயலாளர் என்.பர்வதராஜன் நிறைவுரையாற்றினார். 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் பணமில்லாத சிகிச்சை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 58 நாட்களாக போராடிவரும் போக்குவரத்து தொழி லாளர்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. நாகப்பட்டினம் வட்டச் செயலாளர் டி. கலியபெருமாள் நன்றியுரையாற்றினார்.
