நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், கருங்கன்னி மாதா கோவில் கலையரங்கத்தில் தமிழக அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” மக்கள் குறை தீர்க்கும் முகாம் வியாழனன்று (11.09.25) நடைபெற்றது. நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர், நாகை மாலி கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.