கோவில் திருவிழாவில் இஸ்லாமியர்களின் பாச மழை!
கோவை, அக்.11- மதநல்லிணக்கத்தின் மகத்து வத்தை பறைசாற்றும் வகையில், கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரவான் திருக்கோவில் திருவிழாவில், இஸ்லாமிய சகோதரர்கள் பக்தர்க ளுக்கு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கி பாசமழை பொழிந்த செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கோவை துடியலூரில் உள்ள அர வான் திருக்கோவில் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமர்சையாக நடத்தப்படும் இத்திரு விழா, இந்த ஆண்டும் வெள்ளியன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. துடி யலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த நூற்றுககணக் கானோர் பங்கேற்று, அரவான் சுவாமி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம், கோவிலுக்கு அரு கில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டு கள் பழைமையான பள்ளிவாசல் வழி யாகச் சென்றது. அப்போது, மாலை தொழுகையை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்கள் , ஊர்வல மாக வந்த பக்தர்களுக்குக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். மேலும், இரு கரம்கூப்பி பக் தர்களுக்கு வாழ்த்துகளையும் தெரி வித்தனர். மதங்களைத் தாண்டிய இந்த அன்பும் ஒற்றுமையும் நிறைந்த செயல், திருவிழாவில் கலந்துகொண்ட அனைத்துப் பக்தர்களையும் நெகிழ்ச்சி யில் ஆழ்த்தியது.
 
                                    