மாதர் சங்க இடைக்கமிட்டி மாநாடுகள்
ஈரோடு, ஆக.17- மாதர் சங்க கடம்பூர் மற்றும் கோபி இடைக்கமிட்டி மாநாடு களில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலை வட்டாரக்கமிட்டி 3 ஆவது மாநாடு கடம்பூரில், துணைத்தலைவர் கே.பெருமாயம்மாள் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. வெள்ளையம் மாள் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் பா.லலிதா சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.துரைசாமி, மலைவாழ் மக்கள் சங்க தலைவர் பி. சடையப்பன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட் டில், கடம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். மலையாளி மக்களுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும். மலை பகுதியில் பேருந்து களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் இடைக்கமிட்டி தலைவராக மல்லிகா, செயலாளராக தாயலம்மாள், பொருளாளராக சசிகலா, துணைத்தலைவராக ஈஸ்வரி, துணைச்செயலாள ராக பெருமாயம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.ராஜேஸ்வரி நன்றி கூறினார். கோபி இதேபோன்று, மாதர் சங்க கோபி தாலுகா 7 ஆவது மாநாடு, ஜோதிபாசு நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. தாலுகா தலைவர் ஏ.முத்தாயம்மாள் தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணவேணி, சிபிஎம் தாலுகா செயலாளர் க.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் எஸ்.கீதா துவக்கவுரையாற்றினார். தாலுகா செயலாளர் எஸ்.மல்லிகா வாழ்த்திப் பேசினார். மாவட்டத் தலைவர் பி.எஸ்.பிரசன்னா சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பாலின சமத்துவ பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 11 பேர் கொண்ட தாலுகா குழு அமைக்கப் பட்டது.