மத்திய தரைக்கடலில் 32,000க்கும் மேற்பட்ட அகதிகள் பலி
2014 முதல் மத்திய தரைக்கடலில் 32,700 க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளால் ஆப்பிரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு போர் வறுமையின் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக அந்நாட்டு மக்கள் பெரும் வறுமையில் வாழ்கிறார்கள். இதனால் சிறிய படகுகளில் வாழ்வாதாரம் தேடி மத்திய தரைக் கடல் வழியாக அதிக மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வழியில் ஏற்படும் விபத்தில் பலியாகி வருகின்றனர்.
வெனிசுலா வான் எல்லைக்குள் அமெ. போர் விமானங்கள்
அமெரிக்கப் போர் விமானங்கள் வெனிசு லாவின் வான் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்துள்ளன. இந்த செயலுக்கு வெனிசுலா பாதுகாப்பு மற்றும் வெளியுற வுத் துறை அமைச்சகங்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. வெனிசுலா வின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இதற்காக வெனிசுலா எல்லையில் போர் கப்பல்களையும், ராணுவ விமானங்களையும் நிலை நிறுத்தி அந்நாட்டை மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சூடானில் கனமழை வெள்ளம் 6.4 லட்சம் பேர் பாதிப்பு
சூடானின் தெற்கு பகுதியில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரி ழந்துள்ளனர். வெள்ளத்தால் அப்பகுதியில் உள்ள ஆறு மாகாணங்களில் சுமார் 6,39,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,75,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ஐ.நா அவையின் மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே மலேரியா, சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களின் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சுகாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
பள்ளி கட்டடம் இடிந்து 14 பேர் பலி
இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ளனர். திங்களன்று இந்த விபத்து நடந்த நிலையில் ஒரு வாரமாக மீட்பு பணி நடைபெற்று வரு கிறது. முதலில் 10 க்கும் குறைவான எண் ணிக்கையில் இருந்த பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்டட இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் உடல் சிக்கியுள்ளது. 50 மாணவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவுக்கு உணவு உதவியை குறைக்கும் ஐ.நா.
நிதிப் பற்றாக்குறை காரணமாக சோமாலி
யாவில் அவசரகால உணவு உதவியை குறைக்க உள்ளதாக ஐ.நா உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது. வறுமை, காலநிலை மாற்றம், பஞ்சத்தால் அந்நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. தற்போது 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கு ஐ.நா அவை நிவாரண உதவிகளை கொடுத்து வருகிறது. நிதிப் பற்றாக்குறையின் காரணமாக இந்த அளவானது வரும் நவம்பர் மாதம் 3,50,000 ஆகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
