tamilnadu

கீழடியில்  சிந்துவெளி நாள் விழா அமைச்சர்கள் பங்கேற்பு

கீழடியில்  சிந்துவெளி நாள் விழா அமைச்சர்கள் பங்கேற்பு

சிவகங்கை, செப்.21 – சிவகங்கை மாவட்டம்  கீழடியில் நடைபெற்ற “சிந்து வெளி நாள் விழா”வில், தமிழ்  நாடு நிதி மற்றும் சுற்றுச் சூழல் காலநிலை மாற்றத்  துறை அமைச்சர் தங்கம்  தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்று, நூல்கள் மற்றும்  ஆய்விதழ்களை வெளி யிட்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – சிந்து வெளி ஆய்வு மையம் இணைந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. மதிப்புறு ஆலோசகர் ஆர். பால கிருஷ்ணன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் உள்  ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் பேசிய போது, கீழடியில் கண்டறி யப்பட்ட பொருட்கள் தமி ழர்களின் 2,600 ஆண்டு களுக்கு முந்தைய பண் பாட்டு பெருமையை உல குக்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளன. தொல்  லியல் துறையின் அகழாய்வு கள் தமிழகத்தின் தொன்மை  மற்றும் நாகரிக வரலாற்றை உலக அளவில் உயர்த்தி யுள்ளன. தமிழக முதல்வர்  தொன்மை ஆய்வுகள், திறந்தவெளி அருங்காட்சி யகங்கள் மூலம் வரலாற்றை  பாதுகாக்கும் பணிகளை முன்  னெடுத்து வருவதாக தெரிவித்தனர். மேலும், கீழடி அருங்  காட்சியகத்தில் அமைக்கப் பட்டுள்ள நூலகத்தினை இரு அமைச்சர்களும் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், இந்  திய தொல்பொருள் ஆய்வுத்  துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன், ரோஜா முத்  தையா ஆராய்ச்சி நூலக இயக்கு நர் சுந்தர் கணேசன் மற்றும்  பொதுமக்கள் பங்கேற்றனர்.