உயர் மருத்துவ சேவை முகாம் அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைப்பு
அறந்தாங்கி, ஆக. 9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரம், மறமடக்கி அரசினர் மேல் நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் கலை வாணி, இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) மருத்துவர் ஸ்ரீபிரியா தேன்மொழி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மருத்துவர் ராமு கணேஷ், விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.