அங்கன்வாடி ஊழியர் - உதவியாளர் போராட்டம் தலைவர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்; ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அமைச்சர் ஒப்புக் கொண்டபடி ஒருமாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஜனவரி 6 அன்று மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை துறை அமைச்சர் கீதாஜீவன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். தேவமணி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
