tamilnadu

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் கோவி. செழியன் தகவல்

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் கோவி. செழியன் தகவல்

ஞ்சாவூர், அக்.12- ஒரு மாதத்திற்குள் டிஆர்பி மூலம் 2,200  நிரந்தர பேராசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு நடத்தப் படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பள்ளி  மாணவிகளுக்கு இடையே தஞ்சையில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை  வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  “தமிழ்நாட்டில் கல்வி, சுகாதாரம், தொழில்துறை  எப்படி முதன்மையானதாக விளங்குகிறதோ அதேபோல் விளையாட்டுத் துறையும் முதன்மையாக திகழ்கிறது.  விளையாட்டுத் துறையில் இந்திய அளவில் முதன்மை மாநில மாக தமிழ்நாடு விளங்குகிறது” என்றார். “தமிழகத்தில் 34 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. நான் பொறுப்பேற்ற 8 மாதத்திற்குள் 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 8 புதிய பாடத்திட்டங்கள் தொடங்கப் பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்கு தேவை யான 2,700 நிரந்தர பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் ஒரு மாதத் திற்குள் டிஆர்பி தேர்வு மூலம் 2,200 நிரந்தர பேராசிரி யர்களை நியமிப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.