லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தோழர் வி.எஸ். மறைவுக்கு கேரளத்தில் 7 நாட்கள் துக்கம்
கேரள முன்னாள் முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தனின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவரான தோழர் வி.எஸ்.சின் உடலுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.
சென்னையில் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் தோழர் வி.எஸ். உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.
தோழர் வி.எஸ்.சுக்கு இன்று பிரியாவிடை!
ஆலப்புழாவிலுள்ள இல்லத்திலிருந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் தோழர் வி.எஸ்.சின் உடல், காலை 11 மணியிலிருந்து 3 மணி வரை, ஆலப்புழா கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு மைதானத்தில் சிறப்பாக தயாரிக்கப்பட்ட பந்தலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அங்குள்ள பெரிய சுடுகாட்டில் அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக தலைவர்கள்
இந்திய கம்யூனிச இயக்கத்தின் முதல் தலைமுறை தலைவர்களில் ஒருவ ரான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்து வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் ஆலப்புழா செல்கின்றனர். ஊர்வலம் மற்றும் இறுதி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர்.
திருவனந்தபுரம், ஜுலை 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் (102), திங்களன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தோழர் வி.எஸ். அச்சுதானந்தனின் உடல், திங்களன்று பிற்பகல் திரு வனந்தபுரம் எஸ்.யு.டி. மருத்துவமனை யிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் வைக்கப்பட்ட நிலையில், அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்களும் - தொண்டர்களும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கானோர் கூடி செவ்வணக்கம் செலுத்தினர். பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள மகன் அருண்குமாரின் இல்லத்தில், குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழர் அச்சு தானந்தனின் உடல், செவ்வாயன்று காலை 9 மணியளவில், திருவனந்த புரம் தர்பார் மண்டபத்தில் பொதுமக்க ளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு லட்சக்கணக்கானோர் வரிசை யில் காத்திருந்து தங்களின் அன்புக்கு ரிய தலைவர் வி.எஸ். அச்சுதானந்த னுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கேரள முதல்வர் பின ராயி விஜயன், மாநில அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், அனைத்துக் கட்சி தலைவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். வயது வித்தியாசமின்றி பல்லாயிரக்கணக் கான மக்கள் தங்கள் அன்புக்குரிய தோழருக்கு இறுதி அஞ்சலி செலுத்த தர்பார் மண்டபம் பகுதியில்குவிந்தனர். பிற்பகல் 2 மணிக்கு பிறகு அதி காரப்பூர்வ மரியாதையுடன் வி.எஸ்.ஸின் உடல் மண்டபத்திலிருந்து காவல்துறையினரால் வெளியே கொண்டு செல்லப்பட்டது.
கேரள அரசுப் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட தோழர் வி.எஸ். உடல்!
வி.எஸ்.ஸின் உடல், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (கே.எஸ். ஆர்.டி.சி.) சிறப்பாக அலங்கரிக்கப் பட்ட பேருந்தில் ஆலப்புழாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் ஆயிரமாயிரமாய் பொதுமக்கள் திரண்டு வந்து முழக்க மிட்டு அஞ்சலி செலுத்தினர். திருவனந்த புரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங் களில் உள்ள சுமார் 26 மையங்களில் வி.எஸ்.ஸுக்கு பொதுமக்கள் காத்தி ருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இரவு ஆலப்புழாவில் உள்ள அவ ரது வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கும் மக்கள் பெரும் எண்ணி க்கையில் கூடி, தங்களின் தலைவ ருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
கேரளத்தில் 7 நாட்கள் துக்கம்
கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி யைக் கட்டியெழுப்புவதற்காக தனது