மாதர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட 17-வது மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு
நாகப்பட்டினம், ஜூலை 16- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட 17-வது மாநாடு வரவேற்பு குழு கூட்டம் ஜூலை 15 அன்று சிபிஐ(எம்) மாவட்ட குழு அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் கே.டி.எம். சுஜாதா தலைமையில் நடைபெற்றது. கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக வி.பி.நாகைமாலி, செயலாளராக சி. மாலா, பொருளாளராக எஸ்.சுபாதேவி, துணை தலைவர்களாக கே.டி.எம்.சுஜாதா, எம்.முருகையன் (விதொச), கே. சித்தார்த்தன்(விச), கே. தங்கமணி, (சிஐடியு)டி. ஸ்ரீதர் (டிஎன்ஜிஏ), துணைச் செயலாளர்களாக டி.லதா (மாதர்சங்கம்), பி. சுபாஷ்சந்திர போஸ்(த.தீ.ஒ.மு) டி. அருள்தாஸ்(வாலிபர் சங்கம்), எம்.முகேஷ் கண்ணன் (மாணவர் சங்கம்), வி.கவிதா (ICDS) மற்றும் 43 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சி.மாலா நன்றி உரையாற்றினார்.