tamilnadu

சாலப்பாளையத்திற்கு பாதை அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

சாலப்பாளையத்திற்கு பாதை அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், அக்.24- சாலப்பாளையத்திற்கு செல்ல சாலை புறம்போக்கு பகுதியை அளவீடு  செய்து, பாதை வசதி ஏற்படுத்தி தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சாலப்பாளையம் கிளை சார்பில் வெள் ளியன்று ஊத்துக்குளி தலைமையி டத்து துணை வட்டாட்சியர் மற்றும் ஊத் துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்  ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள் ளது. ஊத்துக்குளி வட்டம், புஞ்சை தலை வாய்பாளையம் ஊராட்சி, சாலப்பா ளையத்திற்கு முறையான சாலை வசதி  இல்லை. கடந்த காலத்தில் ரயில்வே புறம்போக்கை பொதுமக்கள் பல் லாண்டு காலமாக பயன்படுத்தி வந்த னர். தற்போது ரயில்வே துறையினர் நிலத்தை பாதுகாக்க இரும்பு தாளவா டங்களைக் கொண்டு தடுப்புகள் அமைத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சாலப்பாளையம் ஊருக்கு செல்வதற்கு பாதை இன்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர்.  இதுகுறித்து சாலை புறம் போக்கு ஆக இருக்கிற பகுதியை சீர மைத்து சாலை அமைத்து தர வேண்டும்  என்றும், அந்த சாலை புறம்போக்கு  பகுதியை அளவீடு செய்து கொடுக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாலப்பாளையம் கிளை சார் பில் வெள்ளியன்று ஊத்துக்குளி தலை மையிடத்து துணை வட்டாட்சியர் ஈஸ் வரி மற்றும் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)  சர வணன் ஆகியோரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட  அலுவலர்கள் உடனடியாக நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாலப்பாளையம் கிளைச் செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் கே.சரஸ்வதி குமார், தாலுகா குழு உறுப்பினர் ஆர். மணியன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.