tamilnadu

img

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், அரசுப் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை அனுமதிக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை (செப்.5) அன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகில் துவங்கிய ஊர்வலத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் போராட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், வெ. பெருமாள், ஆர். ராஜாங்கம், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்யா, மூத்த தலைவர் முருகன், இடைக்குழுச் செயலாளர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.