கேரளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சி
கேரளம் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தான் பாஜகவைக் கடுமையாக எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசின் கூட்டணிக் கட்சி பாஜ கவுக்கு பெரும் முட்டுக் கொடுத்துள்ளது. மேற்கு ஆசியப் பிரச்சனையில் அனைத்துக் கட்சி கூட்டம்நடந்தது. வெளியுறவுக் கொள்கை யில் பெரும்தோல்வியை பாஜக அரசு அடைந்துள்ளது என்றுஒட்டுமொத்த எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரசின் கூட்டணிக் கட்சி யான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. எரிவாயு விநியோகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியது. அதோடு நிற்கவில்லை. பதற்றத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று பிற எதிர்க்கட்சிகளைப் பார்த்துக் கேட்டுள்ளது. வெளியில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் இதைக் கண்டுகொள்ளவில்லை. கூட்டணிக் கட்சி இப் படிச் செய்கிறதே என்று கேட்டால் கேரளக் காங்கிரஸ் தலைவர்கள் வாயை மூடிக் கொள்கிறார்கள்.
