tamilnadu

img

இரட்டை எஞ்சின் என்றால் “பாஜக-திரிணாமுல்”

இரட்டை எஞ்சின் என்றால் “பாஜக-திரிணாமுல்”

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமை யிலான அரசு மீது குற்றப்பத்திரிகையை பாஜக தயார் செய்திருக்கிறது. பெரிய அளவில் விளம்பரப் படுத்தி அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறார்க ளாம். அதில் 14 அம்சங்கள் உள்ளன. இதைப் படித்தவர்கள், குற்றப்பத்திரிகையைத் தயார் செய்ய இவர்கள் பெரும் சிரமம் எல்லாம் அடைந்திருக்க மாட்டார்கள்.. இந்தக் குற்றச் சாட்டுகள் எல்லாம் பல பாஜக ஆளும் மாநில அரசுகள் மீது உள்ளவைதான்.. அங்கு எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றப்பத்திரிகையை நகல் எடுத்து விட்டார்கள் என்று  கிண்டலடிக்கிறார்கள். சிறுபான்மையினர் மீதான தாக்குதல்க ளை திரிணாமுல் காங்கிரஸ் அலட்சியப்படுத்தி வருகிறது. இதில் பாஜகவும் கைகோர்த்துக் கொள்கிறது. அவர்கள் சொல்லும் இரட்டை எஞ்சின் என்பதே “பாஜக-திரிணாமுல்” கூட்டுதான் என்கிறார்கள்.