tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சூழலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக - 164, காங்கிரஸ் - 28, தே.மு.தி.க. - 10, வி.சி.க. - 8 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5, ம.தி.மு.க. - 4, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி - 2, மனிதநேய ஜனநாயக கட்சி - 1, எஸ்.டி.பி.ஐ - 1, முக்குலத்தோர் புலிப்படை - 1 ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன. நேற்றைய தினம் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இதை தொடர்ந்து, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தளி தொகுதியில் T.ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி தொகுதியில் க.மாரிமுத்து, திருப்பூர் வடக்கு ரவி (எ) எம்.சுப்பிரமணியம், பவானிசாகர் தொகுதியில் பி.எல்.சுந்தரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் P.மகாலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.