tamilnadu

img

திரிபுரா மக்களுக்காக சிபிஎம்

திரிபுரா மக்களுக்காக சிபிஎம்

திரிபுராவில் பாஜக அமைச்சர்க ளாக, சட்டமன்ற உறுப்பினர்க ளாக இருப்பவர்களில் பெரும் பாலானவர்கள் முன்னாள் காங்கிரஸ் காரர்கள். அவர்களில் ஒருவர்தான் விஸ்வபந்து சென். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர், பாஜக வுக்குத் தாவினார். அந்தத் தொகுதி யில் இருந்த கட்சியின் அமைப்பை அப்படியே ஒட்டுமொத்தமாக பாஜக வுக்கு எடுத்துச் சென்றார். அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 600 வாக்குகளை மட்டுமே பெற்றது. 2023இல் நடந்த தேர்தலில் இந்தத் தொகுதியை காங்கிரசுக்கு இடது முன்னணி விட்டுக் கொடுத்தது. கட்சி தாவிய விஸ்வபந்து சென்னிடம் தோற்றனர். விஸ்வபந்து சென்னின் மறைவால் இடைத்தேர்தல் நடக்கி றது. கட்சி மாறிகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உங்க ளுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கியுள்ளது.