tamilnadu

img

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் ஆயிரம் மனுக்களை அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில்  ஆயிரம் மனுக்களை அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

அரியலூர், செப். 8-  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழ மை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1000 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். கடந்த ஜுன் 11 முதல் 20 ஆம் தேதி வரை அரியலூர் மாவட்டம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டன. இந்த பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை, குடிமனை பட்டா, கோவில் நிலங்களில் குடி இருப்பவர்களுக்கான பட்டா, வழங்கப்பட்ட வீட்டு மனை களை அளவீடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அட ங்கிய 1000 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, வி.பரமசிவம், திருமா னூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. சாமி துரை, அரியலூர் ஒன்றியச் செயலா ளர் அருண்பாண்டியன், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ. ராதா கிருஷ்ணன், ஆண்டிமடம் வட்டச் செய லாளர் எம்.வேல்முருகன், ஜனநாய மாதர்சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மலர்கொடி, மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியம், ஒன்றியச் செயலாளர் தனலட்சுமி, மூத்த நிர்வாகி சிற்றம்பலம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆட்சியர் பொ.ரத்தினசாமியை சந்தித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற 1000 மனுக்களை அளித்தனர். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் பேசுகையில், “ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் இலவச வீட்டு மனை பட்டா, கோவில் நிலங்களில் குடி யிருப்போர்களுக்கான பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. வருவாய் துறை  மூலம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும்’’ என கூறினார்.