தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் இராமநாதபுரத்தில் மலர் தூவி தலைவர்கள் மரியாதை
இராமநாதபுரம், செப்.11- இராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமா னுவேல் சேகரனின் 63- ஆவது நினைவுதினத்தை யொட்டி, அன்னாரின் நினை விடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னார். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், நிதி மற் றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, கூட்டு றவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வனம் மற்றும் கதிர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச் சர் பி.மூர்த்தி, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் என்.கயல்வழி செல்வராஜ், தில்லி சிறப்பு பிரதிநிதி எ.கே. எஸ்.விஜயன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இராமநாத புரம் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.நவாஸ்கனி, இராம நாதபுரம் சட்டமன்ற உறுப்பி னர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம், பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் செ.முரு கேசன், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண் முகையா ஆகியோர் மலர் வளையம் மரியாதை செலுத்தினர். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன் னணி நிர்வாகிகள், சங்கம் மற்றும் அமைப்பு தலை வர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத் தினர்.