514 வழக்குகளுடன் மோசமான நிலையில் மதுரை மாவட்டம் தென் மாவட்டங்களில் நான்கரை ஆண்டில் 3,041 வன்கொடுமை வழக்குகள் பதிவு
மதுரை, ஆக. 29 - தென் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,041 எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மதுரை மாவட்டத் தில் 514 வழக்குகள் பதிவாகி உள்ள தாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. பட்டியல் சாதி மற்றும் பட்டியலின பழங்குடியின மக்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படும் போது அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தி மறு வாழ்வு கிடைக்கச் செய்வதற்காக பட்டி யல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கடந்த 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சட்டம் 2015-ம் ஆண்டில் கூடுத லாகப் பிரிவுகளை உள்ளடக்கி அவ சரத் திருத்தச்சட்டமாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான், இத்திருத்தச் சட்டத்தின்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 20.06.2025 வரை நான்கரை ஆண்டுகளில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவ கங்கை, இராமநாதபுரம், திருநெல் வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மொத்தம் 3,041 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி யுள்ளன. மதுரை மாவட்டம் அதிகபட்சமாக 514 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2024 மார்ச் இறுதி நிலவ ரப்படி தமிழ்நாடு ஏடிஜிபி சமூக மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆர்.டி.ஐ. அறிக்கையின்படி தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டு மாநிலத்திலேயே முதல் இடத்தில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.