tamilnadu

img

வாழ்க நீ எம்மான்! -   - ப முருகன்

வாழ்க நீ எம்மான்! 

காந்தி மகாத்மா, அறிந்தே செய்கிறார்கள் அவர்களை மன்னிப்பீர் என்று!  உங்கள் சிலையைச் சிதைப்பதை பெருமையென்று நினைக்கலாம் அது உங்களுக்கு சிறுமையல்ல, அவர்களுக்கே!  உங்களை தாக்கிய வெள்ளை அதிகாரியின் பிய்ந்து போன பூட்ஸை தைத்துக் கொடுத்து அவனையே வெட்கித் தலைகுனிய வைத்த நயத்தக்க நனி நாகரிகர் நீங்கள்  இப்போது உங்களையும் மோடியையும் இந்திய பயங்கரவாதிகள் என்றெழுதி ஒரே தராசில் எடைபோடும் இவர்களையும் மன்னிப்பீர்!  இந்துத்துவா வாதிகள் மட்டுமல்ல, இங்கிலாந்தில் உள்ளவர்களும் உங்களை அவமதிக்கலாம் சிலையைச் சிதைக்கலாம் -உங்கள் சீலத்தைச் சிதைக்க முடியாது!  உங்களை வரலாற்று ஏடுகளிலிருந்து ஒழிக்கவும் அழிக்கவும் அவர்களால் முடியாது! வாழ்வீர் எம்மான் - இந்த வையத்து நாட்டில் எல்லாம்!   - ப.முருகன்