5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
சென்னை, ஆக.8- கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிறந்து 5 மாதங்களே ஆன 8 கிலோ எடையுள்ள ஒரு குழந்தை, கல்லீரலின் செயல்பாட்டைப் பாதிக்கும் ஒரு அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உயிரக்கு போராடி வந்தது. கிரிக்லர்-நஜ்ஜார் நோய்க்குறி வகை 1 என்ற பாதிப்பு காரணமாக கடுமையான மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த, அந்த குழந்தைக்கு உயிருள்ள ஒருவரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை சென்னையில் உள்ள எம்ஜி எம் ஹெல்த்கேர் வெற்றி கரமாக மேற்கொண்டது. 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த குழந்தை நன்றாக குண மடைந்து 14 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. கிரிக்லர்-நஜ்ஜார் நோய்க்குறி புதிதாகப் பிறந்த 10 லட்சம் குழந்தை களில் ஒருவரை மட்டுமே பாதிக்கிறது, இதில் கல்லீ ரல் சிவப்பு ரத்த அணுக் களின் முறிவிலிருந்து உரு வாகும் ஒரு பொருளான பிலிரூபினை உடைக்க முடியாது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இல்லா மல், பாதிக்கப்பட்ட குழந்தை கள் நிரந்தர நரம்பியல் சேதம், கெர்னிக்டெரஸ், கல்லீரல் சிரோசிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றின் மிக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்ற னர். ஒளிக்கதிர் சிகிச்சை யுடன் கூடிய நிலையான மேலாண்மை பெரும் பாலும் பிலிரூபின் அள வைக் கட்டுப்படுத்தத் தவறி விடுகிறது, நோயாளி நீண்ட காலம் நீடிக்க அனு மதிக்காது. எனவே மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே உறுதியான தீர்வாகும் என்று இரைப்பை குடலி யல் சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் மற்றும் இயக்கு நர் டாக்டர் தியாகராஜன் ஸ்ரீனிவாசன் கூறினார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
குழந்தையின் தாயின் கல்லீரலின் ஒரு பகுதி எடுத்து குழந்தைக்கு பொருத்தப்பட்டது. சிறிய குழந்தைக்கு துல்லியமான அளவு மயக்க மருந்து செலுத்தி பல மணிநேரம் இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்வது சவாலாக இருந்தது என்று மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர் தினேஷ் பாபு மற்றும் டாக்டர் நிவாஷ் சந்திர சேகரன் ஆகியோர் கூறி னார் . குழந்தையின் சிறிய உடலுக்கு ஏற்றவாறு கல்லீரலின் அளவு குறைக்கப்பட்டு சரியாகப் பொருத்தப்பட்டது என்று டாக்டர் எல். சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 7.5 இட ஒதுக்கீட்டில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வழங்க கோரி 4 நாட்களாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்மீது பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதனை கண்டித்து வெள்ளியன்று (ஆக.8) நுழைவாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி உள்ளிட்டோர் பேசினர்.
சவாலான அறுவை சிகிச்சை
“150-180 கிராம் கல்லீரலை மட்டுமே பெறக்கூடிய ஒரு குழந்தைக்கு உயிருள்ள நன்கொடையாளரிடமிருந்து கல்லீரல் ஒரு பகுதியை எடுத்து மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. துல்லியமான 3D திட்டமிடல் அத்தியாவசிய ரத்த நாளம் மற்றும் பித்த நாள அமைப்புகளைப் பாதுகாக்கவும் உதவியது. தமனி விநியோகத்தை கவனமாக மறுகட்டமைத்தல் மற்றும் மிகக் குறைந்த ரத்த இழப்புடன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.