tamilnadu

img

காலமுறை ஊதியம் வழங்க நூலகர்கள் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வழங்க நூலகர்கள் வலியுறுத்தல்

கோவை, ஜூலை 11– ஊர்ப்புற நூலகர்களுக்கு கால  முறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நூலகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. இவ்வமைப்பின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முன்னாள் மாநிலத் தலைவர் சரசம்மாள் தலை மையில் வெள்ளியன்று நடைபெற்றது. கோவை தாமஸ் கிளப் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத் தில், மாவட்டப் பொருளாளர் வேலுமணி வரவேற்றார். மாநிலத் தலைவர் த.சம் பத், மாநிலச் செயலாளர் ஷகிலாபேகம், பொருளாளர் சுந்தர்ராஜ், மாவட்டத் தலைவர் வி.செந்தில்குமார் ஆகியோர் உரையாற்றினர். இதில், தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  பழைய தளவாடங்கள் இருப்பு நீக்கம்  செய்ய நிரந்தர ஆணை பெறுதல் வேண் டும். ஓய்வு பெறும் போது நூல் இழப்புத் தொகை விவரம் ஒவ்வொரு மாவட்ட மும் ஒவ்வொரு நடைமுறையிலிருந்து நிரந்தரமாக ஒரு ஆணை வேண்டும். மூன்றாம் நிலை நூலகர்கள் மாவட்ட  மாறுதல் ஒரே அளவின்கீழ் பணியில்  சேர்ந்த தேதியில் நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ரவி,  கிராம சுகாதார செவிலியர் சங்க  மாநில பொதுச் செயலாளர் பிரகலாதா  ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத் தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங் கேற்றனர். நிறைவாக மாவட்டச் செய லாளர் என்.காஞ்சனா நன்றி கூறினார்.