விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் சிற்றன்னை செல்லம்மாள் மறைவையொட்டி, தமிழக அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அம்மையாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.