tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகிக்கும் பணி மாவட்டங்களில் தொடங்கியது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 1,382 தன்னார்வலர்கள் இப்பணி யில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் இத்திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். புதிதாக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு 3 மாதத்தில் தொகை வழங்கப்படும் என சட்டமன்றத்தில் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகளை வழங்கி வருகின்றனர். ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை 176 சிறப்பு முகாம்கள்  நடைபெற உள்ளன. விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத, சென்னை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் 2019 டிசம்பரில்  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த 27 மாவட்டங் களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடி வடைந்தது. இதையடுத்து இந்த உள்ளாட்சிகளின் நிர்வா கங்களை கவனிக்க தமிழ்நாடு அரசு தனி அலுவலர்களை நியமித்தது. இந்த அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த 3  ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடிகை அருணா வீட்டில் ரெய்டு

சென்னை: 80-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அருணாவின் கணவர் மோகன் குப்தா பிரபல தொழிலதிபர் ஆவார். வீடு,  நிறுவனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான அலங்காரப்  பணிகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  சென்னை நீலாங்கரையில் கணவர், பிள்ளைகளுடன் அருணா வசித்து வருகிறார். மோகன் நடத்தி வரும் நிறு வனத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது தொடர் பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை யினர் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் காலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோகன், அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு  ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி  அடைந்துள்ளது. இதையடுத்து, நீதிமன்றம் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, மாநக ராட்சி ஆணையரின் சம்பளத்தில் இருந்து அந்த தொகையை கழித்து அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின்  கணக்கில் டெபாசிட் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

“ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீதிமன்றத்தை விட மேலானவரா..?”

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு  லட்சம் ரூபாய் அபராதத்தை நிறுத்தி வைக்க முறையிடப் பட்ட போது, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் கடுமையாக  கேள்வி எழுப்பினார். “ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதி மன்றத்தை விட மேலானவர் என்று தன்னை நினைத்து கொள்கிறாரா? எங்கள் அதிகாரத்தை காட்டலாமா?” என்று  கேட்டார். “வழக்கறிஞர்கள் தவறான பிரமாணப் பத்திரத்தை கொடுத்திருந்தால் அதை படித்துப் பார்த்து கையெழுத் திட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் ஆணை யராக இருக்கவே தகுதியில்லாதவர்” என்று நீதிபதி தெரி வித்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணை யர் வியாழனன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி  உத்தரவிட்டார்.

கடலூர் ரயில் விபத்து:  13 பேருக்கு சம்மன்

கடலூர், ஜூலை 9- கடலூர் ரயில் விபத்து தொடர்பாக செம்மங்குப்பம் கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் வழங்கப் பட்டது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம்  தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த  விபத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி  ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்திகுமார், உதவி லோகோ  பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த்  சிங், அஜித்குமார், விமல், அங்கித்குமார், ஆனந்த், வடிவே லன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரயில்வே பாது காப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் கேட்  கீப்பர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேட் கீப்பராக ‘தமிழர்’ நியமனம்

இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய  கேட் கீப்பராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகள் பணி அனு பவம் பெற்றவர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது சர்ச்சையான நிலையில், இப்போது  தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறை யாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்திய தாக ஆனந்தராஜ் கூறியுள்ளார்.

வீட்டை காலி செய்ய மறுத்த வழக்கறிஞருக்கு 4 மாதம் சிறை

சென்னை: சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி  செய்ய மறுத்ததாக வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றம் மே 31, 2025-க்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. நீதி மன்றம் கொடுத்த காலக்கெடுவைக் கடந்தும் வீட்டை காலி  செய்ய மறுத்ததால், வீட்டு உரிமையாளர் நீதிமன்ற அவமதிப்பு  வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிபதி கடுமை யான கோபத்துடன் 4 மாத சிறை தண்டனை விதித்தார். “மேல் முறையீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படாது. சிறை யில் இருந்து மேல்முறையீடு செய்து கொள்ளலாம்” என்றும் உத்தரவிட்டார். இத்தகைய நேர்மையற்ற நடத்தையை நீதிமன்றம்  உறுதியாக எதிர்க்கவில்லை என்றால், அது அத்தகைய வழக்கறி ஞர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்றும் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அவர் மீது ஒழுங்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த  தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட  நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.