உயர் நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மடிக் கணினிகள்!
முதல்வர் வழங்கினார் சென்னை, ஜூலை 31 - தமிழகம் முழுவதும், காவல்துறை, தீயணைப்பு - மீட்புத்துறை, சிறைகள் - சீர்திருத்தப் பணிகள் துறை, தடய அறிவியல் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை ஆகியவற்றின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 31) நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மதுரை மத்திய சிறைக்கு புதிய கட்டிடம் மதுரையில், ரூ. 229.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டிய முதல்வர், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் உள்ளிட்ட பணி யிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 40 நபர்களுக்கு பணி நியமன ஆணை களையும் வழங்கினார். அப்போது, உயர்கல்வி நிறு வனங்களில் சேர்க்கை பெற்ற 135 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் மடிக் கணினிகளை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். ஐஐடி, என்.ஐ.டி, என்.ஐ.எப்.டி. உள்ளிட்ட நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளியில் பயின்று உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்தவர் களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, சு. முத்து சாமி, எஸ். ரகுபதி, பி. கீதா ஜீவன், மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.