tamilnadu

நில ஆக்கிரமிப்பு – பாதை உரிமை கேட்டு ஆட்சியரிடம் மனு

நில ஆக்கிரமிப்பு – பாதை உரிமை கேட்டு ஆட்சியரிடம் மனு

ஈரோடு, செப். 1- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில், நில ஆக்கிரமிப்பு, பாதை உரிமை, சொத்து தகராறு, மற்றும் வாடகை வாகனங்களுக்கான கட் டணம் தொடர்பாக பல்வேறு மனுக் கள் அளிக்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குத்தி யாலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அச கித்திக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அளித்த மனு வில், தங்கள் கிராமத்தில் 25க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாக வும், கானக்குந்தூர், ஒசப்பாளையம் தார்சாலைக்குச் செல்லும் 16 அடி  அகலப் பாதையை சிலர் ஆக்கிரமித் துள்ளதாகவும், இதுகுறித்து இரண்டு  மாதங்களுக்கு முன் மனு அளித்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. எனவே, ஆக்கிரமிப்பு களை அகற்றி, தங்களுக்குப் பாதை  அமைத்துத் தர வேண்டும் என்று கேட் டுக்கொண்டனர். இதேபோன்று, பவானி தாலுகா,  புன்னம் கிராமம், பாறைக்காடு பகுதி யைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு வில், தங்கள் கிராமத்தில் உள்ள சுமார்  ஒன்றரை கிலோமீட்டர் நீளமும், பத் தடி அகலமும் கொண்ட பாதையை  பல தலைமுறைகளாக பயன்படுத்தி  வருவதாகவும், அதை அரசு பொதுப் பாதையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கடந்த முறை அரசு ரீ-சர்வே செய்தபோது, அந்தப் பாதை பொதுப்பாதையாக அறிவிக்கப்படாமல் விட்டுப்போன தாகவும், எனவே உடனடியாக அந்தப் பாதையை அரசு பொதுப் பாதையாக அறிவிக்க வேண்டும் என் றும் கேட்டுக்கொண்டனர். மாணிக்கம் பாளையம், ஹவு சிங் யூனிட்டைச் சேர்ந்த மாது என்ப வர் அளித்த மனுவில், தனது ’கௌதம் டூர் அண்ட் ட்ராவல்ஸ்’ நிறு வனத்தில், கடந்த ஆடி 18 அன்று, கொல்லிமலையில் நடந்த வல்வில் ஓரி விழாவிற்காக, ராஜ்கவுண்டர் என் பவர் தனது நிறுவனத்திடம் இருந்தும்  மற்ற வாகன உரிமையாளர்களிட மிருந்தும் சுமார் 30 வாகனங்களை  வாடகைக்கு எடுத்துச் சென்றதாக வும், இந்த வாகனங்களுக்கான மொத்த வாடகைத் தொகை ரூ.2,50,020 என்றும், இதில் ரூ.1,08,500  முன்பணமாக வழங்கப்பட்ட நிலை யில், மீதித் தொகை ரூ.1,46,520 இன் னும் தரப்படவில்லை, மீதித் தொகையைக் கேட்டால் மிரட்டுவதா கவும், எனவே மீதமுள்ள வாடகைத் தொகையையும், வாகனங்களை பழுது பார்த்ததற்கான இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுத்தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மனு  அளித்தார்.