விருதுநகர் கோட்டைப்பட்டியில் பொது கல்லறைத் தோட்டம் - கபர்ஸ்தான் அமைக்க நிலம் ஒதுக்கீடு
சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் தகவல்
விருதுநகர், அக்.24- விருதுநகர் மாவட்டம், கோட்டைப் பட்டியில் பொது கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் (முஸ்லிம் சமூ கத்தினருக்கான மயானம் )அமைக்க தலா ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சிறு பான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை யில் மாநில சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக் கூட்டம் அக்டோபர் 23 அன்று நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் சிறப்பு க்குழு உறுப்பினரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் பங்கேற்றார். மாவட்ட முஸ்லிம், கிறிஸ்தவ உதவும் சங்கம் மூலம் 210 பயனாளிகளுக்கு ரூ.24.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு அவர் கூறுகையில், விருது நகர் வட்டம் கோட்டைப்பட்டியில் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லா மிய மக்களுக்கு பொது கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க தலா ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள், மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யகிராம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜான்சன் தேவசகாயம், வருவாய் கோட்டாட்சி யர்கள் கனகராஜ்(சாத்தூர்), மாரிமுத்து(அருப்புக்கோட்டை) உட்பட பலர் பங்கேற்றனர்.
