வைரமுத்து குடும்பத்தினருக்கு கே. பாலகிருஷ்ணன் ஆறுதல்!
மயிலாடுதுறை, செப். 22- சாதி ஆணவப்படுகொலை செய்ய பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பின ரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றி யத் துணைத் தலைவருமான கே.வைரமுத்துவின் தாயார் ராஜ லட்சுமி, வைரமுத்து திருமணம் செய்ய விருந்த மாலினி, சகோதரிகள் மற்றும் உறவினர்களை மயிலாடுதுறை அடி யாமங்கலத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் திங்களன்று ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பிற்கு பிறகு கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வைரமுத்துவின் குடும்பத்திற்கு பாதுகாப்பாகவும், வழக்கு நடத்து வதற்கு பக்கபலமாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். காதல் திருமணத்துக்கு எதிராக பெண்ணின் உடன் பிறந்தவர்களே கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவத்துக்கு முன்ன தாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்ததாக சொல்லப்படு கிறது. இது குறித்து காவல்துறை முழுமையாக விசாரித்து, தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார். இதுபோன்ற படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொலைக்கு நேரடியாக தொடர்புடை யவர்கள் மட்டுமல்லாது, மறைமுக மாக அதைத் தூண்டும் வகையில், பின்புலமாக உள்ளவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்பதற் காகத் தான் இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலி யுறுத்துகிறோம் என்றார். இதன் பிறகும் தமிழக அரசு அச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. உடனடியாக தமிழக அரசு அச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வைரமுத்துவின் குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது போன்ற காதல் திருமணங்களை தடுப்பவர்களுக்கு எதிராக எல்லா ஜனநாயக அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும் என்றார். மாநிலக்குழு உறுப்பினர் இரா. சிந்தன், மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.