விண்வெளியில் இஸ்ரோ பல சாதனைகளை படைத்துள்ளது இஸ்ரோ விஞ்ஞானி பேச்சு
திருநெல்வேலி, ஆக.23- நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்காக 3 சந்திரயான் மாதிரி தயாரிக்கும் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் இஸ்ரோ கண்காட்சியை பெரும் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்வை யிட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கண்காட்சியை திறந்து வைத்து பேசுகையில், இஸ்ரோவின் பல ஆண்டு கால உழைப்பால் சந்திரயான், போன்ற மகத்தான திட்டங்கள் மூலம் நாம் விண்வெளியில் பல சாதனைகளைப் படைத்துள்ளோம். இளம் வயதிலேயே அறிவியலில் சிறந்து, விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் உருவாகலாம். நமது அடுத்த இலக்கான ககன்யான் திட்டம் மூலம் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.