புரோ கபடி 2025 தமிழ் தலைவாஸ் தோல்விக்கு அணி நிர்வாகம் தான் காரணமா?
12ஆவது சீசன் புரோ கபடி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்நிலையில், தமிழ் தலை வாஸ் தோல்விக்கு அணி நிர்வாகம் தான் காரணம் என அந்த அணியின் கேப்டன், பயிற்சியாளர் குற்றம்சாட்டி யுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழ மை அன்று நடைபெற்ற விறுவிறுப் பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் அணியிடம் 43-44 என்ற புள்ளிக்கணக்கில் நூலிழையில் தோல்வியடைந்து, பிளே ஆப் சுற்று க்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து போட்டிக்குப்பின் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அணி யின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குக் கேப் டனும், பயிற்சியாளரும் அளித்த பதில்கள், அணிக்குள் நிலவும் பிரச்ச னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்தது. அடுத்த சீசனில் அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கேட்கப்பட்ட போது, கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் அணி நிர்வாகத்தை மறைமுகமாகத் தாக்கி, “அணியில் நான் என்ன மாற்ற த்தைச் செய்ய முடியும்? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும், அணிக்குள் இருப்பவர்களுக்கும் என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது நன்றாகவே தெரி யும். களத்தில் நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் திரைமறை வில் அர்ஜுனுடன் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அது அர்ஜுனுக்கு மட்டுமே தெரியும். நான் என் அணியை நம்புகிறேன். ஆனால் அர்ஜுன் மட்டுமே அணியை வெற்றி பெறச் செய்ய முடியாது. வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் என அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றுபட்டுச் செய ல்பட்டால் மட்டுமே அணி வெற்றி பெறும்” என அவர் கூறினார். தொடர்ந்து பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் கூறுகையில்,”அணித் தேர்வில் தனக்கோ அல்லது கேப்ட னுக்கோ எந்தவித அதிகாரமும் இல்லை. அணியை மாற்றுவது அர்ஜுன் கையிலோ அல்லது பயிற்சி யாளர் கையிலோ இல்லை. எங்களிடம் ஒரு ஆய்வாளர் (Analyst) இருக் கிறார். அவர்தான் அணியைத் தேர்வு செய்கிறார். அவர்களால் மட்டுமே மாற்றங்களைச் செய்ய முடியும். சொல்லப்போனால் போட்டி தொடங்கு வதற்கு முன்பு, களமிறங்கும் முதல் 7 வீரர்கள் யார் என்பதை என்னிடம் சொல்வார்கள். இதில் அர்ஜுனாலும், பயிற்சியாளராலும் என்ன செய்ய முடியும்?” என்று அவர் வெளிப்படை யாகக் கேள்வி எழுப்பினார். கேப்டன், பயிற்சியாளர் தங்கள் குற்றம்சாட்டின் மூலம் தமிழ் தலை வாஸ் தோல்விக்கு அணி நிர்வாகம் தான் காரணம் என வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பவன் ஷெராவத் வெளியேறியதற்கும் அதே ஆய்வாளர் தான் காரணமா?
இந்திய அணியின் கேப்டனும், கபடி உலகின் முக்கிய நட்சத்திர வீர ருமான பவன் ஷெராவத் 12ஆவது புரோ கபடி சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப் பட்டார். பவன் ஷெராவத் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், ஜெய்ப்பூர் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால், நரேந்தர் (தமிழ் தலைவாஸ் முன்னாள் கேப்டன்) ஆகி யோரும் இடம்பெற்று இருந்ததால் இந்த முறை தமிழ் தலைவாஸ் கோப்பை யை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒழுங்கீனப் பிரச்சனை கள் காரணமாக தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும், அணியிலிருந்தும் பவன் ஷெராவத் திடீரென நீக்கப்பட்டார். பவன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தது டன், “குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கபடியை விட்டே விலகத் தயார். அணியை முன்னோக்கிக் கொண்டு செல்ல நானும், அர்ஜுன் தேஷ்வாலும் பல திட்டங்களை வைத்திருந்தோம். ஆனால், அணி நிர்வாகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபரால், எங்களால் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை” என குற்றம்ச்சாட்டினார். தற்போது, புதிய கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் மற்றும் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் ஆகியோரும் அணி நிர்வா கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள தால், பவன் ஷெராவத் குறிப்பிட்ட அந்த “ஒரு நபர் (ஆய்வாளர் - Analyst) “ யார் என்ற கேள்வி வலுத்துள்ளது. அணித் தேர்வில் கூட பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் சுதந்திரம் இல்லை என்ற குற்றச்சாட்டு, தமிழ் தலைவாஸ் அணி யின் உள்விவகாரங்கள் எந்த அள விற்கு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தத் தொடர் சர்ச்சைகள், அணியின் செயல்பாடு களையும், வீரர்களின் மனநிலையை யும் கடுமையாகப் பாதித்துள்ளது. இத னால் தான் அனைத்து தகுதி இருந்தும் தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆப் சுற்றை இழந்துள்ளது.
இந்தியா மீண்டும் தோல்வி தொடரை கைபற்றியது ஆஸி
., இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் (ஆஸ்திரேலியா) வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்தது வெற்றி இலக்கை எளிதாக எட்டி, 3 போட்டிகளை ஒருநாள் தொடரை (2-0 முன்னிலையுடன்) கைப்பற்றியது. சனிக்கிழமை அன்று கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.
