tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புத்தொழில் மாநாட்டில் ரூ. 127 கோடி அளவிற்கான முதலீடுகள் ஈர்ப்பு

சென்னை, அக். 18 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாநகரில் தொடங்கி வைத்த உலகப் புத்தொழில் மாநாடு  2025 மகத்தான வெற்றி பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில், 115 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.  அவர்கள் முன்பு, 453 புத்தொழில் நிறுவனங்கள் தங்க ளது நிறுவனங்களை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம்  முதலீட்டு வாய்ப்புகள், வழிகாட்டுதல் மற்றும் இணைப்பு  முயற்சிகள் உருவாகின. மாநாட்டுக்கு முன்பாக ரூ. 127.09 கோடி முதலீட்டு  உறுதிப்பாடு கிடைத்தது. மேலும் பல ஒப்பந்தங்கள் அடுத்த மாதங்களில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படு கிறது என்று அரசு தெரிவித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பிரான்ஸ் நாட்டின் லிங்க் இன்னோவேஷன்ஸ், கனடா  நாட்டின் ஆர்எக்ஸ்என் ஹப், ஜெர்மனி நாட்டின் ஆசியா  பெர்லின் அமைப்பு உள்ளிட்ட பன்னாட்டு தொழில் அமைப்புகள் மற்றும் முன்னணி கார்ப்பரேட் நிறுவ னங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு நாட்களில் மொத்தம் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் 22  நிறுவனங்களில் தொடக்கநிலை தொழில் வளர் காப்ப கங்களை அமைக்க ஆணைகளை வழங்கினார்.

மின்சாரம், நெடுஞ்சாலைகள்  சட்டங்களில் திருத்தம்

சென்னை, அக்.18 - மின் நுகர்வு மற்றும் விற்பனை வரிச் சட்டம், தமிழ்நாடு  நெடுஞ்சாலைகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நுகர்வு மற்றும் விற்பனை விதிகள், தமிழ்நாடு நெடுஞ் சாலைகள் சட்டம் ஆகியவற்றை மீறுவோருக்கு சிறைத்  தண்டனை, அபராதம் போன்ற குற்றவியல் தண்டனைகள்  நடைமுறையில் இருந்தன. அவற்றுக்குப் பதிலாக நிர்வாகம் சார்ந்த தீர்ப்பு முறை மூலமாக பணம் சார்ந்த  உரிமையியல் ரீதியான தண்டத் தொகைகள் மட்டுமே இனி விதிக்கப்படும். இத்தகைய சட்டத் திருத்த மசோதாக்களை பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தாக்கல் செய்த னர். இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக  நிறைவேறின.

தீபாவளிக்கு மறுநாள் அக்.21 அரசு விடுமுறை

சென்னை: தீபாவளிக்கு மறுநாளான அக்.21 அன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்த ஆண்டு அக்.20 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரி யர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்  துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள்  ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு  அக்.21 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழு வதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங் கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், 25.10.2025 அன்று பணி நாளாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்.18  முதல் அக்.21  வரை தொடர்ந்து நான்கு நாள்கள்  விடுமுறை விடப்பட்டுள்ளது” என தெரிவித்து உள்ளது.