tamilnadu

img

இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு எழுச்சியுடன் நிறைவு மாநிலத் தலைவராக சி. மிருதுளா, செயலாளராக சம்சீர் அகமது தேர்வு

இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு எழுச்சியுடன் நிறைவு மாநிலத் தலைவராக சி. மிருதுளா, செயலாளராக சம்சீர் அகமது தேர்வு

திருப்பூர், ஆகஸ்ட் 24- திருப்பூரில் நடைபெற்று வந்த இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 27-ஆவது மாநாட்டின் நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.  மூன்று நாள் மாநாடு  ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாடு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கி யது. சனிக்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் ஆர். ஈஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தி னார். மாநிலத் துணைத்தலைவர் தே. சரவணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச் சார்யா தொடக்க உரையாற்றினார். மாநி லச் செயலாளர் கோ. அரவிந்தசாமி செயல்பாடுகள் குறித்த அறிக்கையை முன்வைத்தார். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாணவர் பெருமன்ற மாநிலச் செய லாளர் தினேஷ், மாணவர் சங்க கேரள மாநிலச் செயலாளர் சஞ்சீவ் பி.எஸ்.  உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்தி னர்.  கல்வி மலர் வெளியீடு  ஞாயிற்றுக்கிழமை கல்வி மலர் வெளியிடப்பட்டது. மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் ஆர். ஈஸ்வரன் மலரை வெளியிட, சங்கத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் சுபாஷ் ஜாக்கர் உள்ளிட்ட தலை வர்கள் பெற்றுக்கொண்டு கருத்துரை நிகழ்த்தினர்.  தீர்மானங்கள்  மாநாட்டில் கல்வித் துறை சார்ந்த  பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. கல்வி நிலையங்களில் மாண வர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் மாணவி கள் மீதான பாலியல் வன்கொடுமை களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.  நிதி நெருக்கடியால் திவாலாகும் நிலையில் உள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், விடுதி மாண வர்களின் உணவுப்படியை உயர்த்து வதோடு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  சர்வதேச ஆதரவுத் தீர்மானங்கள்  ஏகாதிபத்திய தடைகளைத் தாண்டி சோசலிச பாதையில் செயல்படும் கியூபா நெருக்கடியிலிருந்து மீள  ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இஸ்ரேலிய அரசின் போர் மற்றும் இனப்படுகொலை தாக்கு தலை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கல்விக் கொள்கை எதிர்ப்பு  கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வழங்கப் படும் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் மாண வர் சேர்க்கையை சரியாக நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. சட்டக் கல்வி தனியார்மயமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பல் கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சட்டக்கல்லூரிகளில் கட்டண வரம்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  பொதுக்கல்வி முறைக்கும் அறி வியல் பூர்வ கல்விக்கும் எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அறிவுசார் மையங் கள் என்கிற பெயரில் அரசுப் பள்ளி களின் உட்கட்டமைப்புகளை ஆக்கிர மிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டது.  கல்வியை வணிகமயமாக்கும், கிராமப்புற மாணவர்களின் மருத்து வக் கல்வியைப் பறிக்கும் ஒன்றிய அரசின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  புதிய நிர்வாகிகள் தேர்வு  மாநாட்டின் நிறைவில் 83 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. சி. மிருதுளா மாநிலத் தலைவராகவும், தௌ. சம்சீர் அகமது மாநிலச் செயலாளராகவும் தேர்வு  செய்யப்பட்டனர்.   கே.பி. சௌமியா, பவித்ரன், அகல்யா,  சுகதேவ், தீபக் ராஜ், சைலஸ் அருள் ராஜ் ஆகியோர் துணைத் தலைவர் களாக தேர்வு செய்யப்பட்டனர்.  ஜி.கே. மோகன், அமுல் காஸ்ட்ரோ,  ஆனந்த குமார், ஷாலினி, தங்கராஜ்,  ஹரீஷ் ஆகியோர் இணைச் செயலா ளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.  சங்கத்தின் அகில இந்தியத் தலை வர் ஆதர்ஷ் எம். சாஜி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். எஸ். பிரவீன்குமார் நன்றியுரை நிகழ்த்தி மாநாட்டை நிறைவு செய்தார்.   - ந.நி